சியான் விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம்.. 8 கெட்டப் டீசர் தாமதம்..

Ceyan Vikrams Cobra Teaser Release date

by Chandru, Apr 8, 2020, 11:54 AM IST

சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் எட்டுக்கும் மேற்பட்ட கெட்டப் அணிந்து நடிக்கிறார். இதன் டீசர் விக்ரம் பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களும் டீசரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.


இது குறித்து இயக்குனரிடம் ஒரு ரசிகர் கேட்டபோது, 'தற்போதைக்கு ஸ்டூடியோ உள்ளிட்ட சினிமா சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் மூடியிருப்பதால் டீசர் வெளியிட வாய்ப்பில்லை. அதற்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும்' என அஜய் ஞான முத்து பதில் அளித்துள்ளார்.

More Cinema News


அண்மைய செய்திகள்