கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியத் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றிணைந்து பேமிலி என்ற குறும்படம் நடித்துள்ளனர். அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால், சிவராஜ் குமார், ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடித்துள்ளனர். இது நேற்று வெளியிடப்பட்டது.
இந்த குறும்படத்துக்கு பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது, 'வீடுகளில் இருப்பவர்களின் நன்மைக்காக இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்திருக்கும் இந்த குறும்படம் பார்ப்பதற்கு சுவையாகவும் அர்த்தமுள்ளதாகவும் மக்களுக்கு அமைந்திருக்கிறது' என தெரிவித்துள்ளார்.