மீ டூ இயக்கம் தொடங்கியதும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள். போலீசிலும் புகார் தரப்பட்டது. இதையடுத்து பாலியல் தொல்லை பிரச்சனை குறைந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகை மான்வி காக்ரு, தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார். இவர் அமேசான் பிரைம் வெப் சீரிஸ் போர் மோர் ஷாட்ஸ் சீரிஸில் நடித்தவர் .
தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மான்வி கூறியது :சில மாதங்களுக்கு முன் தெரியாத எண்ணிலிருந்து எனக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் வெப் சீரிஸ் தயாரிக்க உள்ளதாகவும் அதில் நடிக்க வேண்டும் பட்ஜெட் இவ்வளவு என்றார் பட்ஜெட் குறைவாக இருக்கிறதே என்று நான் சொன்னதும் மூன்று மடங்கு உயர்த்தி கூறியதுடன் எனது சம்பளம் பற்றிப் பேசினார். முதலில் ஸ்கிரிப்ட் சொல்லுங்கள் பிடித்திருந்தால் சம்பளம் பற்றி பேசலாம் என்றேன். அதற்கு அவர் சம்பளம் பிரச்சனையில்லை நீங்கள் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடந்து கொள்ளவேண்டும் என்றார். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். கோபத்தில் அவரை திட்டியதுடன் போலீசில் புகார் கூறுவேன் என்றேன். மீடூ பிரச்சனை இவ்வளவு பெரிதாக ஆகியும் இன்னும் சிலர் அதுபோன்ற செயல்களைச் செய்யத் துணிவது எப்படி என்று தெரியவில்லை.இவ்வாறு மான்வி கூறினார்.