இன்று சிப்ளிங் டே கொண்டாடப்படுகிறது. அதாவது சகோதரர் தினம் . இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அஜீத், விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது மங்காத்தா படப்பிடிப்பின்போது எடுத்த படம். புகைப்படத்துடன் வெளியிட்ட மெசேஜில் சகோதர தினத்தின் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும். அனைவரும் அன்பைப் பரப்புங்கள். வெறுப்புணர்வை நிறுத்துங்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வெங்கட் பிரபுவின் இந்த டிவிட்டுக்கு ஏராளமானவர்கள் லைக் கொடுத்திருப்பதுடன், இந்த மூவர் கூட்டணியை (அஜீத்,விஜய், வெங்கட் பிரபு)ஒருமுறையாவது திரையில் காண வேண்டும்என விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.