கொரோனா வந்தாலும் வந்தது ஊரடங்கு என்ற பெயரில் எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிப் போட்டுவிட்டது. வெற்று நாட்களிலே மீம்ஸ் கிரியேடர்கள் வெளுத்து வாங்குவார்கள். இப்போது ஊரடங்கு, வேலை இழப்பு, வீட்டிலேயே இருந்து கம்பெனிக்கு வேலை செய்வது என்றாகிவிட்டது. இந்த வாய்ப்பை மீம்ஸ் கிரியேட்டர்கள் சும்மா விடுவார்களா? 100 கொரோனா பாதிப்பு என்றால் 10 லட்சம் பேர் வீட்டில் புருஷன் பொண்டாட்டி சண்டை என்று மீம்ஸ் போட்டு தெறிக்கவிடுகிறார்கள்.
100க்கு 90 சதவீதம் மீம்ஸ்கள் வடிவேலுவின் காமெடியை மையப்படுத்தித்தான் வருகிறது. என்னவெல்லாம் நடக்கும் என்பதை முன் கூட்டியே யோசித்து நடித்திருக்கிறார் வடிவேலு.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் எப்போதும் கோபமாக மிரட்டிப் பேசும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனையே மனம் விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறது வடிவேலுவின் ஒரு மீம்ஸ். இதுபற்றி அவர் கூறும்போது,”ரொம்ப தீவிரமா யோசிக்கும் வடிவேலு .ஆமா நான் என்ன வேலை செஞ்சிட்டிருந்தேன் என்று தான் செய்துகொண்டிருந்த வேலையையே மறந்துவிட்டது போல் வந்த மிம்ஸை பார்த்து மனம்விட்டு சிரித்தேன் ”எனக் குறிப்பிட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.