நடிகை ஸ்ருதி ஹாசன் விட்ட இடத்தை பிடிக்கப் போராடி வருகிறார். விஜய்,சூர்யா, தனுஷ், விஷால் என ஜோடி போட்டு வந்தவர் திடீரென தனக்கு தானே பிரேக் போட்டுக்கொண்டார். சங்கமித்ரா படம் அவரை இன்னொரு படி உயர்த்தும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்படக்குழுவுடன் ஏற்பட்ட மோதலால் அதிலிருந்து விலகினார். அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது. அதன் பிறகு படங்களை ஒப்புக்கொள்ளாமல் பாய்பிரட்ண்டுடன் டேட்டிங், மேற்கத்திய பாப் இசை எனத் தனது கவனத்தை திசை திருப்பினார் இதற்கிடையில் நிறைய புது முகங்கள் கோலிவுட்டில் நுழைந்து இடத்தை ஆக்ர மித்துக்கொண்டனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஸ்ருதி ஏற்றார். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு விட்டு விட்டுத் தொடர்கிறது. புதிய படங்கள் எதுவும் தேடி வராத நிலையில் தற்போது கவர்ச்சி பாதைக்கு சிக்கனல் காட்டி இருக்கிறார். தனது இணைய தள பக்கத்தில் படுகவர்ச்சியான ஸ்டில் வெளியிட்டு 'ஐ ஆம் வெயிட்டிங் ' என்பதுபோல் ஒரு கிக்கான லுக்கும் விட்டிருக்கிறார்.
கவர்ச்சி வலை வீசியிருக்கும் ஸ்ருதிக்கு வாய்ப்புக்கள் கைகூடுமா என்பது இனி தான் தெரியவரும்.