சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது நெட்டிசன்கள் சரமாரியாக புகார் கூறி உள்ளனர். கொரோனா பாதிப்புக்காக சோனாக்ஷி எந்த நிவாரண நிதியும் அளிக்கவில்லை. ஆனால் ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பில் மட்டும் கலந்து கொள்கிறார். வெளியில் சென்று மற்றவர்களுக்கு கொரோனா பரப்புகிறார் என்று சொல்லி அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதற்கு சோனாக்ஷி பதில் அளித்திருக்கிறார். 'ஊரடங்கில் எந்த படப்பிடிப்பும் நடக்க வில்லை. 2019ம் ஆண்டு படப்பிடிப்புக்குச் சென்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வதந்தி கிளப்புகிறார்கள் அதை யாரும் நம்ப வேண்டாம். நான் மனிதாபிமானம் பக்கம் நிற்கிறேன். மும்பையில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு அளிக்கிறேன்' என்றார் சோனாக்ஷி .