கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் முகநூலில் கொரோனா குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது பற்றிக் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பால் வீட்டிலிருக்கும் மக்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் மய்யம் டாக்ஸ் என்ற புதிய முயற்சியைத் தொடங்கி அதன் மூலம் 5 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. இதன் அடுத்த முயற்சியாக உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் மய்யம் டாக்ஸ் நிகழ்ச்சியில் தினமும் மதியம் 12 மணிக்கு மக்களுடன் கலந்துரையாட இருக்கிறார்கள்.
வாரம் இரு முறை பேஸ்புக் லைவ் (Facebook Live) மூலம் மாலை 6 மணிக்குக் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன் இதன் முதல் நேரலையில் கொரோனா குறித்த மக்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். தொழில் முனைவோர்களுக்கான குறிப்புகளைத் திரு. சி.கே . குமரவேல், எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகியிருப்பதைப் பற்றி ஶ்ரீப்ரியாவும், இளைஞர்கள் அச்சம் தவிர்ப்பது பற்றி, கவிஞர். சினேகனும், நற்பணி இயக்க செயலாளர் தங்கவேலு தலைவர் கமலுடன் அவரது 40 ஆண்டு பயண அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், தான் வாழ்வில் சந்தித்த சவால்கள் பற்றி கமீலா நாசர், லாக்டவுன் முடிந்தவுடன் எதிர்நோக்கப் போகும் நிர்வாக சவால்கள் பற்றி முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி த.ரெங்கராஜன் நேரலையில் உரையாடினர்.
மக்கள் நீதி மய்யம் நிகழ்வை இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். அதில் 5 லட்சம் மக்கள் கலந்துரையாடி உள்ளனர். தமிழ் புத்தாண்டில் முனைவர்.தி ஞான சம்பந்தன் "உன்னால் முடியும் தம்பி" என்ற தலைப்பில் இலக்கியமும் நகைச் சுவையும் ஒன்று சேர்த்துப் பேசினார். #maiamtalksல் இதுபற்றிய விவரங்கள் அறியலாம்.
இதனை மக்கள் நீதி மய்யம் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.