நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனமான வேடங்களிலும், நடிப்பார், கிளாமர் ஹீரோயினாகவும் நடிப்பார். தமிழ் தவிரத் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். இவர் நேற்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை டிவிட்டரில் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
அதைப் பார்த்த ஒருவர், 'நீங்கள் தெலுங்கு பெண் தானே, தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறீர்கள்' என நக்கலாகக் கேட்டார். அதைக்கண்டு உர்ரான ஐஸ்வர்யா, 'தமிழா இருந்த என்ன, தெலுங்கா இருந்த என்ன? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை . இன்று நல்ல நாளாக அமையட்டும் என நாகரீகமாக மூக்குடைக்கும் பதில் தந்தார்.