நடிகை ஷாலினி என்றதும் தல அஜீத் ஷாலினி என்று நினைக்க வேண்டாம் இவர் ஷாலினி பாண்டே. விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் ஜீவாக்கு ஜோடியாகக் கொரில்லா படத்திலும் மற்றும் நடிகையர் திலகம் படத்திலும் நடித்ததுடன் தற்போது அனுஷ்காவுடன் நிசப்தம் படத்திலும் நடிக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கு யாரைப் பிடிக்காது, யாரைப் பிடிக்கும் என்றதற்குப் பதில் அளித்தார்.
ஒரு சிலர் நமக்கு ஒன்றுமே தெரியாதது போலவும் தன்னை பெரிய புத்திசாலிகள் மேதைகள் போல் காட்டிக்கொள்வதுடன் நம்மையே அவர்களின் அதிகாரத்தில் கட்டுப்பட வைக்க முயல்வார்கள். அப்படிப்பட்டவர்களை எனக்குப் பிடிக்காது அவர்களிடமிருந்து விலகியே இருப்பேன். இன்னொரு வகையினர் இருக்கின்றனர். நம் மீது அதிக அன்பு, அக்கறை செல்லுவதுபோல் நம்மிடம் பழகுவார்கள். அவர்கள் பக்கத்தில் இருந்தாலும் எளிதில் சமாளித்து விடலாம். இவ்வாறு ஷாலினி பாண்டே கூறினார்.