நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கிய ஒ பேபி படத்தில் சமந்தா நடித்திருந்தார். இப்படம் வெற்றியாக அமைந்தது. இதையடுத்து நந்தினி இயக்கும் மற்றொரு ரீமேக் படத்தில் சமந்தா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதற்கு நந்தினி பதில் அளித்துள்ளார்.
'அடுத்து நான் இயக்கப் போவது ரீமேக் படமில்லை நானே எழுதி உள்ள ஒரிஜினல் கதை. இப்படத்தை மகாநதி (தமிழில் நடிகையர் திலகம் ) படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் தயாரிக்கிறார்.
நானும் சமந்தாவும் மீண்டும் இணைவதாக இருந்தால் அது பற்றி நானே தெரிவிப்பேன்' என்றார். சமந்தாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே 96, யூ டர்ன் ஆகிய ரீமேக் படங்களில் நடத்திருந்தார்.