தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரும் ஜூன் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இது பற்றி சங்க தனி அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 6 வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். (Black & white address book Rs. 500/-, colour address book Rs. 2000/-)
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற ஜூன் 21ம் தேதி (21.06.2020) நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை உறுப்பினர்கள் கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் அட்டவணை விவரம்:
* 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்).
* 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.
* 15.05.2020 காலை 10 மணி முதல் 19.05.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்து விட வேண்டும். (விண்ணப்பப் படிவங்களைத் தபால் அல்லது courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 19.05.2020 மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளபடுகிறது)
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில் 19.05.2020 மாலை 5 மணிக்குச் சீல் வைக்கப்படும்.
* 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற இயலாது.
* 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
25.05.2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதிபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.கொரோனாவைரஸ் ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் விசாரிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு:
தலைவர் பதவிக்கு - ரூ. 1,00,000/- (ஒரு லட்சம் மட்டும்)
மற்ற நிர்வாகிகள் பதவிக்கு - ரூ. 50,000/- (ஐம்பதாயிரம் மட்டும்)
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு - ரூ. 10,000/- (பத்தாயிரம் மட்டும்)
இவ்வாறு சங்க தனி அலுவலர்-தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.