ஸ்ரீதேவியின் வெளிவராத குடும்ப படம்..

Unseen pic of Sridevi, Janhvi, Khushi and Boney Kapoor

by Chandru, Apr 19, 2020, 10:24 AM IST

தமிழில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்ற ஸ்ரீதேவி அங்கு நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாய் சென்றபோது தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்தார். அதன் பிறகு அவரது மகள் ஜான்வி இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் குடும்ப படங்கள் நிறைய வெளிவந்திருந்தாலும் இதுவரை வெளி வராத அழகான குடும்ப படம் இந்த கொரோனா லாக் டவுனில் வெளியாகி இருக்கிறது.

இதனை ஸ்ரீதேவியின் குடும்ப நண்பரும், பாலிவுட் திரையுலகில் 25 வருடம் அனுபவம் வாய்ந்த வருமான புகைப்பட நிபுணர் தபு ரத்னானி வெளியிட்டுள்ளார். புகைப்படம் 25 வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவி அவரது மகள்கள் குஷி, ஜான்வி என மூன்று பேரும் சேலை உடுத்தியிருக்கின்றனர். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் குர்தா பைஜமா அணிந்திருக்கிறார். இதுபற்றி கூறிய தபு ரத்னானி, 'இந்த படம் ஆயிரம் பாராட்டுகளுக்குத் தகும். இதற்கான நினைவுகள் விலைமதிப்பற்றது 'எனத் தெரிவித்திருக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை