நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது புதிய படத்துக்கு மோகன்தாஸ் என டைட்டில் அறிவித்தார். இதையடுத்து மகன் நினைவில் ஆழ்ந்தார். கொரோனாவில் தனிமையில் இருக்கும் நிலையில் விரைவில் அவனைச் சந்திக்க ஆசையாக உள்ளதாகத் தெரிவித்தார். தற்போது திரையுலகில் தனது முதல் நண்பர் சிம்பு என்று கூறியுள்ளார். இதுபற்றி விஷ்ணுவிஷால் கூறும்போது, ' சினிமாவில் நடிக்க வந்த புதிதில் யாரும் என்னை ஊக்குவிக்கும் விதமாகப் பேசவில்லை. நடிகர் சிம்பு எனக்கு ஊக்கம் தரும் வார்த்தைகள் கூறினார். அவர் எப்போதும் நேர்மையாக மனதில் பட்டதைச் சொல்வார். ராட்சஷன் படத்தின் போது சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் பல விஷயங்கள் கூறினார். இருவரும் எப்போதும் மரியாதை உடன் கூடிய அன்புடன் பழகுகிறோம்.
இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.