கொரோனா ஊரடங்கில் பிரபலங்கள் எல்லோருமே வீட்டில் முடங்கி உள்ளனர். அவர்கள் வீட்டு வேலைகள் செய்துவிட்டு சக நண்பர்களுக்கும் இதைச் செய்ய வேண்டும் என்று சவால் விடுகிறார்கள். அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் இப்படியொரு சவாலை பாகுபலி இயக்குனர் ராஜ மவுலிக்கு விட்டார். அதை ஏற்று வீட்டைச் சுத்தம் செய்து வீடியோ வெளியிட்டதுடன் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு சவால் விட்டார் ராஜமவுலி.
அதனை இருவரும் ஏற்றனர். இதில் ஜுனியர் என்டிஆர் நடிகர் சிரஞ்சீவிக்குச் சவால் விட்டார். அந்த சவாலை ஏற்ற சிரஞ்சீவி வீட்டைச் சுத்தம் செய்ததுடன், ஸ்பெஷல் டிபன் செய்து தனது தாய்க்குப் பரிமாறினார். பிறகு இந்த சவாலைத் தனது நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு விட்டார். ரஜினி அதையேற்று வீட்டில் சமையல் செய்வாரா என்பது இனிதான் தெரியவரும்.