தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல ஹீரோ விஜய் சேதுபதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பின்போது இருவரும் நெருக்கமாக பழகினார்கள். விஜய்க்குக் கன்னத்தில் முத்தம் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி. அதே போல் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டின்போது விஜய் சேதுபதிக்கு முத்தம் தந்து அன்பை வெளிப்படுத்தினார் விஜய்.
இப்போது விஷயம் அதுவல்ல..மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று விஜய்யிடம் விஜய் சேதுபதி கேட்டார். தான் தெலுங்கில் வில்லனாக நடித்த உப்பென்ன படத்தின் ரீமேக் ரைட்ஸ் தன்னிடம் இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவியின் உறவுக்கார இளைஞர் பஞ்சா விஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமானார். அது சக்தி வாய்ந்த கதாபாத்திரம் அதில் உங்கள் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினால் பொருத்தமாக இருக்கும், அப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லி விஜய்யின் சம்மதத்தைப் பெற்றிருக்கிறாராம். தெலுங்கில் உப்பென்ன படத்தை புஜ்ஜிபாபு சனா இயக்கினார். அவரே தமிழ் ரீமேக்கையும் இயக்க உள்ளாராம்.