கொரோனா தொற்று பரவல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் பலரும் வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிப்ஸ் தந்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது என்னுடைய ரெக்கார்டிங் ஸ்டுடியோ எனது வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. இசை அமைக்கும் பணியைத் தொடங்கினால் அதற்கு முன்பு பணி செய்வதற்கான உடையை அணிந்துகொள்வேன். சாதாரண உடையில் இருக்க மாட்டேன். வேலை முடிந்த பின்தான் குடும்பத்தார் மற்ற யாருடனும் பேசுவதென்றாலும் பேசுவேன். வேலை செய்யும் இடத்தில் மெழுகுவர்த்தியும், ஊதுபத்தியும் ஏற்றி வைத்துக்கொள்வது நேர்மறையான எண்ணத்தைத் தரும். நல்ல மனநிலையைப் பராமரிக்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்கிறோம் என்பதற்காக அதிகமாகச் சாப்பிடக்கூடாது என எளிமையான டிப்ஸ்களை பகிர்ந்திருக்கிறார்.