மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் அதே நாளில் தல அஜீத் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்த நாளன்றும் அஜீத் ரசிகர்கள் இணைய தளத்தில் அஜீத்துக்கென்று பிரத்தியோகமாக டிபி உருவாக்கி அதை டிரெண்டு ஆக்குவார்கள். இம்முறையும் டிபி உருவாக்கி அதை அருண் விஜய், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன், பிரேம்ஜி, இசை அமைப்பாளர் தமன். நடிகைகள் ஹன்சிகா, யாஷிகா ஆகியோர் வெளியிடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி தகவல் அறிந்த அஜீத் அப்படி எதுவும் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சாந்தனு தனது டிவிட்டரில் ,தல அஜீத் அலுவலகத்திலிருந்து அவரது மேனேஜர் எனக்கு போன் செய்து தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டுக் கொண்டபோது அஜீத் பிறந்தநாளன்று டிபியோ அல்லது பிறந்தாள் கொண்டாட்டமோ இந்த கொரொனா ஊரடங்கு நாளில் செய்ய வேண்டாம் என்றார். அவரது கோரிக்கையை நான் மதிக்கிறேன். அந்த ஜென்டில்மேன்தனம் தான் அஜீத். அவருக்கு நமது வாழ்த்துக்களைத் தனிப்பட்ட முறையில் சொல்வோம் எனத் தெரிவித்திருக்கிறார். சாந்தனுவின் இந்த டிவிட்டை ஆதவ் கண்ணதாசன் ரீடிவிட் செய்திருக்கிறார்.சாந்தனுவிடம் அஜீத் தரப்பு ஏன் இப்படிச் சொன்னது என்றபோது அஜீத் பிறந்த நாளின்போது டிபி வெளியிடும் பிரபலங்களில் அவரும் ஒருவர் என்பதால் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாம். அந்த தகவலை சாந்தனு மற்றவர்களுக்கும் பகிர்ந்திருக்கிறார்.