இந்தி நடிகர்களில் வித்தியாசமானவர் ஆமிர்கான். வித்தியாசமான கதை அம்சங்களுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் ஏழைகளுக்கு உதவ நினைத்தவர் ஒரு கிலோ கோதுமை மாவு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒரு ட்ரெக்கில் கோதுமை பாக்கெட்டுகளை வைத்து அதை விநியாகம் செய்தார்.ஒரு கிலோ என்றதும் பலர் வாங்க வரவில்லை. ஆனால் ஒரு கிலோ கோதுமை மாவு கூட வாங்க முடியாத ஏழைகள் வந்து அதனைப் பெற்றுச் சென்றனர். வீட்டில் சென்று பாக்கெட்டை பிரித்ததும் அதில் மாவுடன் சேர்ந்து 15 ஆயிரம் ரூபாயும் இருந்தது கண்டு ஆச்சரியம் அடைந்தனர், கோதுமை பாக்கெட்டில் பணம் இருக்கும் விஷயம் அமீர்கானின் மேனேஜருக்கு கூட தெரியாதாம். நிஜமாகவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவிப் போய்ச் சேர வேண்டும் என்பதால் இந்த நூதன முறையை அவர் பின்பற்றினாராம்.