சகுனி படத்தில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். மேலும் சில தமிழ், தெலுங்கு,கன்னட படங்களில் நடித்திருக்கிறார். பட வாய்ப்புகள் குறைந்தாலும் சொந்த தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்.கொரோனா ஊரடங்கில் நடிகைகள் வீட்டில் இருப்பதால் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கும் வகையில் சோஷியல் மீடியாவில் தங்களின் கவர்ச்சி படங்களையும், கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதற்கு தற்போது வரவேற்பு குறைந்துவிட்டது.அதற்குப் பதிலாக கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்ய எதிர்பார்க்கின்றனர், சில நடிகைகள் அமைப்புகளுக்கு நிதி அளித்திருக்கின்றனர்.
அதன்மூலம் தங்களின் உதவிக்கரத்தை நீட்டியிருக்கின்றனர். நடிகை பிரணிதா இன்னமும் நெருக்கமாகத் தனது சேவையை அளித்திருக்கிறார். தனது உணவகத்தில் தானே சமைத்து அதனை கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் வருமானம் இன்றி கஷ்டப்படும் ஏழைகளுக்கு அந்த உணவை அளித்து வருகிறார். பிரணிதா போல் மற்ற நடிகைகளும் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர். சமைக்கும் சவாலை எத்தனை நடிகைகள் நிறைவேற்றப் போகிறார்களோ தெரியவில்லை.