மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். கொரோனா ஊரடங்கு நிலவும் நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று கற்பனையாக ஒரு கார்ட்டூன் படத்தை ரசிகர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.விஜய் உள்ளிட்ட நடிகர்கள் படித்துக்கொண்டிருக்க மாளவிகா மட்டும் கவர்ச்சி உடையில் சமையலறையில் சமைப்பதுபோல் படம் இடம் பெற்றிருந்தது. அதைக்கண்டு உர்ரான மாளவிகா இங்குக்கூட ஆண், பெண் வித்தியாசமா.. பெண் என்றால் சமையல்தான் செய்ய வேண்டுமா? என்று கோபப்பட்டிருந்தார். அதைப்பார்த்து ரசிகர்கள் மாளவிகாவைத் திட்டி தீர்த்தனர். உடனே தனிபட்ட பதிவை மாளவிகா நீக்கினார்.
இன்று குறிப்பிட்ட கார்ட்டூனில் மாளவிகா புத்தகம் படித்துக்கொண்டிருப்பதுபோல் கார்ட்டூன் மாற்றப்பட்டு வெளியானது. அதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த மாளவிகா, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆமாம் நான் அதிகம் புத்தகம் படிப்பேன் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார்.