ரிஷிகபூர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்.. இந்திய திரையுலகுக்குப் பேரிழப்பு..

Rishi Kapoor demise: President and Prime Minister Condolences

by Chandru, Apr 30, 2020, 19:02 PM IST

பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பினார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மூச்சுதிண்ரல் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

ரிஷிகபூர் மறைவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
ரிஷிகபூரின் அகால மரணம் அதிர்ச்சியளிக்கிறது. எப்போதும் சிரித்த முகத்துடன் ஒரு பசுமையான ஆளுமை, அவர் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். இனி அவர் உயிருடன் இல்லை என்று நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது, ரிஷிகபூர் மறைவு பொழுதுபோக்கு துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்..


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பன்முக திறமை படைத்தவர், யதார்த்தமான நடிப்புக்குச் சொந்தக்காரர் அவர்தான் ரிஷிகபூர். நாங்கள் இருவரும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதை அடிக்கடி நினைவு கூர்வேன். இந்தியத் திரையுலகத்தின் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

You'r reading ரிஷிகபூர் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்.. இந்திய திரையுலகுக்குப் பேரிழப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை