ரிஷிகபூர் மறைவு ரஜினி, கமல்ஹாசன் நட்சத்திர கூட்டம் அஞ்சலி..

by Chandru, Apr 30, 2020, 19:17 PM IST

பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் (67) மறைவுக்கு ரஜினிகாந்த். கமல்ஹாசன், சரத்குமார் மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்,
ரஜினிகாந்த்: ரிஷிகபூர் மரணச் செய்தி அறிந்ததும் இதயமே உடைந்துவிட்டது. என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.


கமல்ஹாசன்:ரிஷிகபூர் மரணம் நம்பவே முடியவில்லை. எந்த நேரத்திலும் சிரித்த முகத்துடன் காட்சி தருவார். எங்கள் இருவருக்கும் பரஸ்பரம் அன்பு. மரியாதை இருக்கிறது. உங்களை இழந்துவிட்டேன். எனது இதயத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

சரத்குமார்: ரிஷியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். திரையுலகுக்குப் பேரிழப்பு. இதயத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.


நடிகை டாப்ஸி: ரிஷியைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணம் துடிக்கிறது. ஆனால் அவரது மறைவு என் சிந்தனையை அடைத்துக் கொண்டிருக்கிறது. எதுவும் எழுத முடியவில்லை. எனது மனமும் பதற்றத்தில் பரிதவிக்கிறது. அவரது மறைவை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. அவரது அந்த சிரிப்பு, நகைச்சுவை உணர்வு. அவரது நேர்மை, எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். உங்களைப்போல் இன்னொருவரைக் காண முடியாது.

நடிகை வேதிகா: ரிஷிகபூர் மரணம் அறிந்து இதயம் நொறுங்கிவிட்டது. நேற்று முன்தினம்தான் நீங்கள் நடித்த சாந்தினி படத்தை டிவியில் பார்த்து உங்களை எண்ணி பெருமை கொண்டோம். உங்களுடன் இணைந்து பணியாற்ற எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். உங்களது கனிவுக்கும். பெருந்தன்மைக்கும் நன்றி. இந்த உலகில் உங்கள் இடத்தையும், உங்கள் திறமையையும் யாராலும் நிரப்ப முடியாது. உங்கள் ஆன்மா அமைதிகொள்ளட்டும்.

வரலட்சுமி சரத்குமார்: 2020ம் ஆண்டு மிகவும் கெடுதலான வருடமாக இருக்கிறது. மற்றொரு சாதனையாளர் ரிஷிகபூர் மறைந்துவிட்டார். திரையுலகுக்கு அவர் செய்த சேவையை வார்த்தைகளால் அளவிட முடியாது. அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தேன். அவரது நடிப்பைப் பார்த்து என் நடிப்பை வளர்த்துக் கொண்டேன். உங்களை இழந்துவிட்டோம் என்பது மிகப்பெரிய வருத்தம்.

மாதவன்: கவர்ச்சியானவர். எதையும் இதயத்திலிருந்து தைரியமாகப் பேசுபவர் என்பதற்கு என்றென்றைக்கும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள். அக்கறையான உங்களின் அறிவுரைக்கு நன்றி. உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன். சொர்க்கம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. என் இதயம் உடைந்துவிட்டது.


இயக்குனர் செல்வராகவன்: முதலில் இர்பான்கான் தற்போது எனக்கு மிகவும் பிடித்த ரிஷிகபூர் மறைவு என்னை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. இது திரையுலகிற்கு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்.

தமன்னா: கொஞ்சமும் நம்பமுடியவில்லை. காலையில் எழும்போதே ரிஷிகபூர் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.
மேலும் நடிகர் சிபி சத்யராஜ், நடிகைகள் ஹேமமாலினி, ஜெனிலியா, காஜல் அகர்வால், பிரியாமணி, ஹன்சிகா உள்ளிட்ட தென்னிந்திய மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் ரிஷிகபூர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.


Speed News

 • தெருவுக்கு வாங்கய்யா..

  யஷ்வந்த் சின்கா ட்விட்

  முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா? இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 

  May 23, 2020, 14:18 PM IST
 • சிறப்பு ரயில்கள் வேண்டாம்..

  மேற்கு வங்கம் கோரிக்கை

  மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தற்போது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு அம்மாநில அரசு கோரியு்ள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவுக்கு தலைமைச் செயலாளர் ராஜு சின்கா கடிதம் அனுப்பியு்ள்ளார், அதில், சிறப்பு ரயிலில் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி, தனிமைப்படுத்துவதற்கு இயலாத சூழல் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் எ்னறு கோரப்பட்டுள்ளது. 

  May 23, 2020, 13:57 PM IST
 • மகாராஷ்டிராவில் 44 ஆயிரம்

  பேருக்கு கொரோனா பாதிப்பு

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். 1517 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மும்பையில்தான் அதிகபட்சமாக 27 ஆயிரம் பேருக்கு கொரானா தொற்று பரவியிருக்கிறது.

   

  May 23, 2020, 13:53 PM IST
 • ஒரு லட்சத்து 6,750 பேருக்கு

  கொரோனா பரவியது..

  நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து  1,139 பேரில் இருந்து  ஒரு லட்சத்து 6,750 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174ல் இருந்து 41,298 ஆக அதிகரித்து்ள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை  3,163ல் இருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது.

  May 20, 2020, 13:42 PM IST
 • மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு

  1325 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் மிகவும் அதிகமானோருககு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 37,136 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 1325 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காவல்துறையில் மட்டும் 1388 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 428 பேர் குணமடைந்துள்ளனர். 12 பேர் பலியாகியுள்ளனர். 

  May 20, 2020, 13:37 PM IST