கோலிவுட் நடிகர்களுக்கும் மல்லுவுட் நடிகர்களுக்கும் இடையே இனம்புரியாத ஒரு பந்தம் அந்த காலம் தொட்டே நிலவி வருகிறது. ரஜினி கமல், மம்முட்டி மோகன்லால், ஜெயராம் எல்லாரும் படங்களில் இணைந்து நடித்து தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இளம் தலைமுறையினரிடமும் அதே நட்பு தொடர்கிறது. துல்கர் சல்மான், பிருதிவி ராஜ் போன்றவர்கள் கோலிவுட் நடிகர்களுடன் நட்புடன் இருக்கின்றனர்.
நடிகர் விஷ்ணு விஷால் பிருதிவிராஜுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், ' நீங்கள் நடித்த ஐயப்பனும் கோஷியும் படத்தைப் பார்த்து வியந்தேன். உங்கள் ரசிகனாக மாறிவிட்டேன்' என குறிப்பிட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்த பிருதிவி ராஜ், 'நன்றி' தெரிவித்ததுடன், ' உங்களின் ராட்சஷன் படம் என்னை மிகவும் கவர்ந்தது வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்தார் .இருவரின் பரஸ்பர பாராட்டுக்களைப் பார்த்த ரசிகர்கள் இருவரும் படத்தில் இணைந்து நடிக்க வேண்டும்' என தெரிவித்திருக்கின்றனர்.