நடிகர் கமல்ஹாசன் விஜய்சேதுபதி இருவரும் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினர். அப்போது கமல் கூறியதாவது : நான் எப்போதும் நிறையச் சாப்பிடுவேன். என்னிடம் நெருங்கிப் பழகியவர்களிடம் கேட்டால் நீண்ட கதைகள் சொல்வார்கள். ஒருமுறை நான் சாப்பிடும் அளவை பார்த்து சிவாஜி ஆச்சரியப்பட்டுப் போனார். ஆனால் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளத் தினமும் 14 கி மீட்டர் ஓடுவேன். பின்னர் விபத்தில் சிக்கிய பிறகு அவ்வளவு தூரம் ஓடுவதில்லை.
ஆளவந்தான் படத்தில் குண்டான வேடத்தில் நடிப்பதற்கு உடலில் வெயிட் போடுவதற்காக நாளொன்றுக்கு 32 முட்டைகள் சாப்பிடுவேன். அதன் பிறகு முட்டை என்றாலே திகட்டும். சுமார் ஒரு வருடம் முட்டை சாப்பிடாமலிருந்தேன். அப்போது போட்ட வெயிட் பம்மல் சம்பந்தம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கப் பயன்பட்டது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்