நோட்டா படத்தில் நடித்ததுடன் டியர் காம்ரேட்,அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் விஜயதேவரகொண்டா இளம் நடிகரான இவர் ராஷ்மிகாவை காதலிப்பதாக கிசு கிசு வெளியானது. அதை இருவருமே மறுத்தனர். இந்நிலையில் தனது திருமணம், காதலி பற்றி விஜயதேவரகொண்டா கூறினார்.அவர் கூறும்போது, 'நான் இன்னும் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டி உள்ளது. யாருக்கும் பதில் சொல்லாமல் சொந்தமாக எனது வாழ்க்கையில் முடிவு எடுக்கும் நிலைக்கு என் தகுதியை வளர்க்க வேண்டும் அந்தநிலைக்கு இன்னும் நான் வரவில்லை. எனது திருமணம் மற்றும் வரப்போகும் மனைவி பற்றி கூறவேண்டுமானால் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்த எனக்கு இன்னும் பக்குவம் தேவைப்படுகிறது.
எனக்கு வரும் மனைவி நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இதுபோன்ற லாக்டவுன் நேரத்திலும் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். எனக்கான காதலியை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் திருமணம் என்பது பத்தோடு பதினொன்று கிடையாது. திருமணம் செய்பவருக்குப் பொறுப்பு மிக முக்கியம். வாழ்க்கை துணைவியாக வருபவரை மதிக்க வேண்டும். அதற்கு ஆயத்தமான பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கான கால நேரத்துக்கு என்னை நான் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு விஜயதேவரகொண்டா கூறினார்.