கொரோனா வைரஸ் ஊரடங்கால் எளிய மக்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பல நடிகர், நடிகைகள் அமைப்புகள் மூலமாகவும். நேரிலும் உதவினர். சில வாரங்களுக்கு முன்பு இந்தி நடிகர் ஆமிர்கான் கோதுமை பாக்கெட்டில் 15 ஆயிரம் ரூபாய் வைத்து ரகசியமாக ஏழை மக்களுக்குக் கொடுத்ததாக வடமாநில ஊடகங்களில் படங்களுடன் தகவல் வெளியானது. அதுபற்றி மவுனம் காத்து வந்த ஆமிர்கான் தற்போது பதில் அளித்திருக்கிறார்.
ரசிகர்களே, கோதுமை பாக்கெட்டுகளில் நான் பணம் போட்டுக் கொடுக்கவில்லை. இது முற்றிலும் பொய் செய்தி. தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ராபின்வுட் யாராவது இப்படிச் செய்திருக்கலாம். அவரை நானும் தேடி வருகிறேன் எனத் தெரிவித்துள்ளார் .