ஏழைகளுக்கு சோப்பு இலவசமாக தரவேண்டும்.. ஸ்ரீ பிரியா வேண்டுகோள்..

COVID 19India actress sripriya request Government

by Chandru, May 5, 2020, 16:57 PM IST

பிரபல நடிகையும் ஸ்ரீப்ரியா, மக்கள் நீதி மய்யம் பிரதிநிதியுமான ஸ்ரீபிரியா கூறியிருப்பதாவது:கிராமப்புறங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின்கள் கிடைக்கச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட், அரசின் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வித்திட்டது. இந்த நடவடிக்கை மூலம் கிராமப்புறத்தில் வசிக்கும் எண்ணற்ற பெண்களின் மாதாந்திர சுகாதார பிரச்சனை தீர்க்கப்பட்டது எனலாம். எனது டிவீட்டிற்கு உடனடியாக பதில் அளித்த சுகாதாரத்துறை செயலாளருக்கு எனது நன்றி.

ஒட்டுமொத்த மக்கட் தொகையும் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் இந்த நேரத்தில், கைகழுவும் சோப்பும், சானிடைசரும் கிடைப்பதில் நடைமுறையில் பெரும் சிக்கல் நிலவி வருகிறது. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இப்பொருட்களுக்கு பெரும் பற்றாக்குறையே நிலவுகிறது. இதனைத் தவிர்த்திட, அரசு இந்த பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவர்களது தயாரிப்புகளை பொது மக்களுக்கு மலிவு விலையிலும், ஏழை மக்களுக்கு இலவசமாகவும் விநியோகம் செய்திட உரிய முன்முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் மக்களின் பொதுச் சுகாதாரம் மேம்படுவதால், நோய் பரவுவதும் கட்டுப்படுத்தப்படும். இந்த பொருட்களை அன்றாடம் வீட்டுக்கு வந்து உடல்நலம் விசாரிக்கும் மாநகராட்சி ஊழியர்களிடமே கொடுத்து விநியோகமும் செய்திடலாம் என்பதும் ஒரு கூடுதல் யோசனை. அடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் இந்த பேரிடர் காலத்தில் பராமரிப்பதைப்போல் என்றும் பராமரிக்க
படவேண்டும்.

இந்த யோசனைகளை சேன்ஜ்.ஓஆர்ஜி [CHANGE.ORG] என்ற இணையதளத்திலும் ஒரு மனுவாகப் பதிவு செய்துள்ளேன். அதிகமான கையொப்பங்கள் தான் அதை அரசின் மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்லும் .அதற்கு அனைவரும் அவசியம் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.

You'r reading ஏழைகளுக்கு சோப்பு இலவசமாக தரவேண்டும்.. ஸ்ரீ பிரியா வேண்டுகோள்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை