தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:சில தினங்களுக்கு முன் என் வீட்டுக்கு சுமார் 20பேர் குழுவாக வந்தனர். சூழ்நிலை காரணமாக அவர்களை நான் சந்திக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் எனக்கு ஒரு வீடியோ அனுப்பி அதை முதல்வர் பார்வைக்கு அனுப்ப கேட்டனர்.
அதில் அவர்கள் ராஜமுந்திரி, விஜயவாடா பகுதியிலிருந்து வேலைக்காக இங்கு வந்து கொரோனா தடையால் ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். உணவுக்கும் வழியில்லை என்ற நிலையில் 15 நாடுகளுக்கு நான் உணவு அளித்தேன். தங்குவதற்கும் இடம் இல்லையாம். எனவே அவர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி செல்ல போக்குவரத்தை அரசு ஏற்படுத்தி தர வேணடுகிறேன்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.