நடிகை மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருப்பதுடன் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனார். இவரைப்பற்றி சிலர் விமர்சித்து மெசேஜ் வெளியிடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்குப் புகார் அனுப்பினார். இந்நிலையில் மற்றொரு டிவிட் மெசேஜில் தனிப்பட்ட பெண்கள் மீது பாய்ந்திருக்கிறார்.
அவர் கூறும் போது.தொழில் ரீதியாக ஒரு பணியில் இல்லாமல் சோஷியல் மீடியாவில் இருக்கும் பெண்கள் உடல் அழகைக் காட்டினாலோ. ஆபாசமாக படங்கள் பதிவிட்டாலோ அவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் அத்துடன் கைது செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கும் மீரா. தனது பாய்பிரண்டுடன் தனி அறையில் நடனம் ஆடும் வீடியோ வெளியிட்டு,ஆன்மாவின் வலியைச் சொல்ல வார்த்தைகள் போதுமானதாக இல்லை எனத் தத்துவம் உதிர்த்திருக்கிறார்.