திருநங்கை- வளர்ப்பு மகள் பந்தம் பெற்ற தாதா சாகேப் விருது.. மறு பிறந்தாள் சாதனை..

'மறு பிறந்தாள்' (மீண்டும் பிறந்தாள்) இசைப் பாடல் வெளியிடப்பட்டதிலிருந்தே, அதன் உள்ளடக்கம், தனித்துவமான கத்துருவுக்காகவும், வரவேற்பைப் பெற்று வருகிறது. டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


10வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் 2020 சிறந்த இசைப் பாடலுக்கான விருது 'மறு பிறந்தாள்' பாடலுக்குக் கிடைத்திருக்கிறது. ஆயுர்வேத டாக்டராகவும் தொழில் முனைவோராகவும் புகழ் பெற்ற டாக்டர் ஷானி ஹபீஸ் கருத்துருவில் உருவான இப்பாடலை ஆதர்ஷ் என்.கிருஷ்ணாவுடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.
இது குறித்து விவரித்த ஷானி ஹபீஸ் , "ஒரு குடும்பத்தைப்போல் ஒன்றிணைந்து செயல்பட்ட எங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய கெளரவமாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே பல்வேறு சர்வதேச திரைப்பட மற்றும் இசை விழாக்களில் பாராட்டுகள் பெற்றாலும் இந்த விருது ஒரு மிகப் பெரிய அங்கீகாரம். இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதா சாஹிப் பால்கே பெயரில் வழங்கப்படும் விருது பெறுவதை எங்கள் வாழ் நாள் சாதனையாகவே கருதுகிறோம்.

யூ1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் எங்கள் இசைப்பாடலை மிகப் பரவலாக எல்லா இடங்களிலும் கொண்டு சேர்த்த யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி. இதுபோல் பலவற்றை உருவாக்கி மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற உத்வேகமும் எனக்கு ஏற்படுகிறது" என்றார்.அபி ரெஜி ஒளிப்பதிவு செய்யப் படத்தொகுப்பை பிரேம் சாய் முகுந்தன் செய்திருக்கிறார். ரென்ஜூ ரென்ஜிமார் மற்றும் ரோஸ் ஷெரின் அன்ஸாரி நடித்திருக்கிறார்கள். திருநங்கை ஒருவருக்கும் அவரது வளர்ப்பு மகளுக்குமான உணர்வுப் பூர்வமான பந்தத்தை விளக்கும் வகையில் அமைந்த இந்த அழகான பாடல்.
சர்வதேச தாய் திரைப்பட விழாவில் டைட்டில் விருது பெற்றிருக்கும் 'மறு பிறந்தாள்', பாங்காக் இசை விழாவிலும் விருது வென்றிருக்கிறது.

பாங்காக் இசை விழாவுக்கு இந்தியாவிலிருந்து அதிகாரப் பூர்வமாகத் தேர்வான ஒரே இசை வீடியோ 'மறு பிறந்தாள்' மட்டுமே. கோல்டன் ஃபாக்ஸ் விருதுக்கு நுழையத் தகுதி பெறக் கலந்து கொள்ள வேண்டிய சர்வதேச கல்கத்தா கல்ட் திரைப்பட விழா, புத்தா சர்வதேச திரைப்பட விழா (பூனா), லாஸ் ஏன்ஜல்ஸ் ஃபெஸ்டிஜியஸ் சர்வதேச திரைப்பட விழா (வெண்கல விருது வென்றது), குளோபல் மியூசிக் அவார்ட் (கலிபோர்னியா), செமி ஃபைனலிஸ்ட் டு ரோம் பிரிஸ்மா விருது (இத்தாலி) ஆகியவற்றையும் வென்றிருக்கிறது. கேரளாவில் நடைபெறும் சர்வதேச விவரண மற்றும் குறும்பட விழா, பஞ்சாபில் நடைபெறும் ஏஏபி சர்வதேச திரைப்பட விழா, அமெரிக்காவில் நடைபெறும் குறும்பட விழா, பூனாவில் நடைபெறும் சர்வதேச குறும்பட திரைப் பட விழா, ராஜஸ்தான் மற்றும் ஜெய் பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா 2020 ஆகியவற்றுக்கும் அதிகார பூர்வமாக மறுபிறந்தாள் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?