ஹாரி பாட்டர் படத்தில் ரோன் வெயிஸ்லே என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ருபர்ட் கிரிண்ட். இவர் தனது கேர்ள் பிரண்ட் மற்றும் நடிகை ஜார்ஜியா குரூமை காதலித்து வந்தார். இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் லண்டன் சாலையில் சென்றபோது சிலர் அவர்களைப் புகைப்படம் எடுத்தனர். அப்போது ஜார்ஜியா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
பின்னர், நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு இணைந்து வாழ்கிறோம் என்று தனது ஏஜென்ஸியினர் மூலம் ருபர்ட் தம்பதியினர் அறிவித்தனர். இந்நிலையில் ஜார்ஜியாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிவித்திருக்கிறார் ருபர்ட். அதேசமயம்,தங்கள் வாழ்க்கை எங்களது தனிப்பட்ட விஷயம் அதுபற்றி பொது வெளியில் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.