பிரதமர் மோடி நேற்று இரவு நான்காவது லாக் டவுன் பற்றி அறிவித்தார் அவர் பேசியது சரிவரப் புரியவில்லை என்று பலரும் ஆதங்கப்பட்டனர். காங்கிரஸ் தலைவர்களும் தங்களது அதிருபித்தியை தெரிவித்தனர்.தமிழக காங்கிரஸ் பிரமுகர் குஷ்பு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டார்.அதில், 'போங்கடா என் சமையலாவது நேரத்துக்கு முடிச்சிருப்பேன். டயம் வீணா போச்சு' என்று குறிப்பிட்டு இருந்தார். குஷ்புவின் இந்த மெசேஜ் குறித்து தமிழக பஜா பிரமுகர் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மெசேஜ் வெளியிட்டார் அதில், 'குஷ்பு தமிழ் எழுத கற்றுக் கொள்ள வேண்டும். டிவிட்டரிலும் தமிழிலேயே எழுத வேண்டும்' என்று கூறியிருந்தார்.
எச். ராஜாவின் இந்த கருத்துக்கு நடிகை குஷ்பு பதிலடி தந்திருக்கிறார்.அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ' ஏன் உங்களுக்கு எரியுது. நான் எங்காவது பிரதமர் பெயர் சொன்னேனா? வெயில் அதிகமா இருக்கு கூலா இருங்க. எனக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். அதை உங்களை போன்றவர்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. சலோ வணக்கம்.நரேந்திர மோடி நேற்று எந்த மொழியில் பேசினார் என்பதை என்னைத் தமிழில் பேசச் சொல்பவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் டிவிட்டர் என்பது சர்வதேச சமூகத் தளம் அதில் தமிழில் தான் கண்டிப்பாக டைப் செய்ய வேண்டும் என்றால் பிரதமர் மோடியும் தமிழில் தான் பேச வேண்டும்.ஏனென்றால் இருப்பதிலேயே தமிழ் தான் பழம்பெரும் மொழி. அவர் எதற்கு இந்தியில் பேசுகிறார் என குஷ்பு குறிப்பிட்டிருந்தார்.