ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி

1980s stars Radhika, Kushboo, Oorvasi and Suhasini In James Vasanthan film

by Chandru, May 13, 2020, 17:07 PM IST

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980 களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


1980களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்த ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோருடைய கதாபாத்திரங்களின் நீட்சியைப் பின்புலமாகக் கொண்டும், அவர்களின் தற்போதைய வாழ்வின் நிதர்சனத்தையும் அடித்தளமாகக் கொண்டும், ஒரு முற்றிலும் வித்தியாசமான குடும்பபாங்கான கதையைப் படைத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.
இதில், ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் இணைந்து ஜித்தின் ராஜ் - லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார்.

இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருப்பதும் கூடுதல் சுவாரஸ்யம். ஷரன் சாமுவேல் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத்தொகுப்பைக் கவனித்திருக்கிறார். நளினமான நடன அசைவுகளுக்கு ஜான் பிரிட்டோ பொறுப்பேற்றிருக்கிறார். ரொமாண்டிக் காமெடி ஓ அந்த நாட்கள் மும்மொழி படம் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.

You'r reading ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை