கமல்ஹாசனின், 'ஹே ராம்' படத்தில் நடித்தவர் ராணி முகர்ஜி. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார், இவர் அளித்த ஒரு பேட்டியில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய் திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. ஒரு நண்பர் என்ற முறையில் இல்லாவிட்டாலும் ஒரு நடிகை என்ற முறையில் கூட எனக்கு அழைப்பு அனுப்பவில்லை எனக் கவலை வெளியிட்டிருந்தார்.
அபிஷேக் பச்சனும் ராணி முகர்ஜியும் முன்னதாக டேட்டிங் செய்து வந்தனர். அவர்கள் காதலிப்பதாகவும் அப்போது கிசு கிசு வெளியானது. இதற்கிடையில் ஐஸ்வர்யாராயுடனும் ராணி முகர்ஜி நட்புடன் இருந்தார். இத்தருணத்தில் தான் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் காதலிக்கத் தொடங்கி அது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தின் போது பழைய காதலி வந்தால் அது வீண் பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் ராணி முகர்ஜிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாம். மேலும் ராணி முகர்ஜி அப்போது டைரக்டர் ஆதித்யா சோப்ராவுடன் டேட்டிங் செய்து வந்தார் பின்னர் அவரையே திருமணமும் செய்துகொண்டார்.