'ஒரு அடார் லவ்' மலையாள படத்தில் அறிமுகமானவர் பிரியா வாரியர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது அதில் பிரியா வாரியர் காதலனைப் பார்த்து கண்ணடித்து நடித்த காட்சி பிரபலம் ஆனது. அதன்மூலம் ஒரே இரவில் நெட்டில் வைரல் ஆனதுடன் ரசிகர்கள் முதல் செலப்ரிட்டிகள் வரையில் பிரபலம் ஆனார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கிலும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இணைந்தனர். சுமார் 7 மிலியனுக்கும் அதிகமாக அதாவது 70 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் குவிந்தனர் கோலிவுட் மட்டுமல்ல சில ஹாலிவுட் ஸ்டார்களின் ஃ பாலோவர்களையும் மிஞ்சினர்.
இந்நிலையில் திடீரென்று பிரியா வாரியார் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விளகினார். அதற்கான காரணம் பற்றி அவர் தெரிவிக்கவில்லை அதே சமயம் மற்ற இணைய தள கணக்குகளில் தொடர்ந்து நீடிக்கிறார்.லட்சம் கணக்கான ஃபாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் பிரியா வாரியர் மீது யார் கண்ணு பட்டுச்சோ இன்ஸ்டாவிருந்து விலகி விட்டாரே, என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.