கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அம்மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள் அதிகாரிகள் பணியாளர்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவப்பு மண்டலம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து நடிகர் கார்த்தி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு முதல் மாவட்டமாக சிவப்பு மண்டலத்திலிருந்து பச்சை மண்டலமாகி இருக்கிறது. கடந்த 32 தினமாக ஒரு நபர் கூட கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை.. இத்தகைய நிலையை எட்டுவதற்காகப் பணியாற்றிய அதிகாரிகள் போலீசார், டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு சல்யூட். இது ஒரு சாதனை ' எனத் தெரிவித்திருக்கிறார்.