சினிமாவில் வில்லன் ஆக நடிக்கும் ஒரு சில நடிகர்கள் நிஜ வாழ்வில் ஹீரோவாக உயர்ந்து நிற்கின்றனர் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் தனது ஊழியர்களுக்கு 3மாத சம்பளம் வழங்கி அவர்களுக்கு விடுமுறை அளித்தார். பின்னர் பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டை கள் வழங்கினார்.
இதையடுத்து வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணியாற்றுபவர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கியவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும் தனது பண்ணை வீட்டில் தங்குவதற்கு இடம் தந்தார். இது பற்றி அவர் டிவிட்டரில் கூறும்போது, 'வேலைக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள் ரோடில் நிற்கிறார்கள் அவர்களுக்குக் கடன் வாங்கியாவது, பிச்சை எடுத்தாவது உதவுவேன். சக குடிமகனாக என்னை அவர்கள் வேகமாக நடக்க வைக்கிறார்கள். அவர்கள் எனக்கு எதுவும் திருப்பி தர வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய உடன் நாங்கள் ஒரு மனிதனைச் சந்தித்தோம் அவர் எங்களுக்கு நம்பிக்கையும், வலிமையையும் கொடுத்தார் என குடும்பத்தினரிடம் கூறுவார்கள். அது போதும் ' என்றார் பிரகாஷ் ராஜ்.