இயக்குனர் கவுதம்மேனன் கொரோனா ஊரடங்கில் தனது வீட்டில் இருந்தபடியே திரிஷா நடித்த, 'கார்த்தி டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை இயக்கினார். திரிஷாவும் தனது வீட்டிலிருந்தபடியே நடித்து படமாக்கினார். இந்த குறும்படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு துவக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு கார்த்திக் கதாபாத்திரத்திலும் திரிஷா ஜெசி பாத்திரத்திலும் நடித்தனர். அதில் வந்த பாத்திரங்கள் பேசுவது போல் தான் குறும்படம் உருவாகி இருக்கிறது. இக்குறும்படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாகத் தெரிகிறது. மேலும் சிம்புவும் இக்குறும்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தருவதாக அமைந்திருக்கிறது.