4 வருட இருண்ட காலத்திலிருந்து மீண்டது எப்படி.. சுஷ்மிதா ஒபன் டாக்..

1994ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்வானவர் சுஷ்மிதா சென். தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி.. என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2014 ஆண்டு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாத புதுவித நோய்க்கு உள்ளானார். இதனால் வாழ்க்கையின் மீதான பிடிமானத்தை இழந்து தவித்தார். 4 வருடங்கள் அவரது வாழ்க்கை இருண்ட காலம்போல் ஆகிவிட்டது. இதுபற்றி சுஷ்மிதா கூறியதாவது:கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் சூழ்ந்தன. இதற்கான அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் எடுத்துக்கொண்டபோது மயக்கத்தால் பாதிக்கப்பட்டேன். இதுபோன்ற ஒரு குறைபாடுள்ள நோயுடன் வாழ்வது வேதனையானது, நடந்தது நடந்து விட்டது. இதிலிருந்து மீள்வதற்கு வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்.


தியான முறைகளை கற்றதுடன் நுன்சக்கு பயிற்சி செய்யத் தொடங்கினேன். இதனால் அமைதியின்மை தீர்ந்தது. வலிகளை எதிர்த்துப் போராடியபோது அது ஒரு கலை வடிவமாக மாறியது. எனது உடலில் அட்ரினல் கிளாண்டுகள் செயல் படத்தொடங்கின. தொடர் பயிற்சியில் கடந்த 2019 ம் ஆண்டு முற்றிலுமாக அந்த நோயிலிருந்து மீண்டேன். அதற்காகப் பயிற்சி அளித்த ஆசிரியர் நுபுர் ஷிக்ஹரெவுக்கு நன்றி. நம்முடைய உடல் நிலை பற்றி நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது அதனை நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.
இவ்வாறு சுஷ்மிதா சென் கூறினார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?