மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் தனது நீண்ட நாள் ஃபாய்பிரண்ட் மற்றும் காதலன் ராஜவேலுவை அறிமுகம் செய்துவைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாகக் காதலனுடன் பிரியா பவானி பிரேக் அப் செய்து கொண்டதாகவும் நடிப்பில் முழுகவனம் செலுத்த உள்ளதாகவும் கிசுகிசுக்கள் உலா வருகின்றன.
அதற்கேற்ப அவரும், கடந்த ஒரு வருடத்தில் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. கடவுள் என் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. நான் தனிமையில் நிற்கிறேன் என்று தகவல் வெளியிட்டு மொட்டை மாடியில் சித்ரா பவுர்ணமி இரவில் தனியாக இருப்பதுபோன்று புகைப்படம் வெளியிட்டார். அதைப் பார்த்தவர்கள் பிரியா பவானி காதலனுடன் பிரேக் அப் செய்துவிட்டதாகவே எண்ணினர். நெட்டிலும் இந்த தகவல் பரவியது. ஆனால் அதைப் பார்த்துப் பிரியா பவானி சிரிப்பதுபோல் தற்போது ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
இது சிரித்து மழுப்பும் விவகாரமில்லை உண்மையைச் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் பிரியா பவானியிடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.