டிவி படப்பிடிப்பு நடத்தத் தமிழக அரசு அனுமதி.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரைப்பட மற்றும் தொலைக் காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தற்போது டிவி படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி இடம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்( STEPS) சார்பில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்துரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். சின்னத் துறையினரின் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள்
1) சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (இண்டோர் ஷூட்டிங் ) படப்பிடிப்பு நடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (கண்டெய்ன்மன்ட் ஜோன்) இதுபோன்ற பொருந்தாது.
2) பொது இடங்களில் படப் பிடிப்பு நடத்தக்கூடாது எனினும் ஊரகப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை ஏதுமில்லை.

3) பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது
4) படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டினை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாகக் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்


5 ) படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர்கள் தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்க வேண்டும். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு
இடைவேளையின்போது தவறாமல் முககவசம் அணிய வேண்டும்.

6) படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
7 ) படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் அதேபோன்று படப்பிடிப்பிற்கு உபயோகப் படுத்தப்படும் கேமரா கிரேன் உட்பட அனைத்து சாதனங் களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

8 )சளி, இருமல் காய்ச்சல் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் கலைஞர்களையும் அல்லது தொழில்நுட்ப பணியாளர் களையோ படப்பிடிப்பு வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது. இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக மருத்துவ
பரிசோதனைக்கு அனுப்பவேண்டும்.

9) அதிகபட்சமாக நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்கள் உள்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

10 )சென்னையில் படப் பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையர் இடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

11 ) மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப் பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்

படப்பிடிப்புக்கு வருகைதரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதைச் சின்னத் திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்பு நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?