பாகுபலி நடிகர் ராணாவும். ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகாவுக்கும் காதல் மலர்ந்தது, இதனை சில தினங்களுக்கு முன் ராணா தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது. நிச்சயதார்த்தம் பற்றி அவரது குடும்பத் தாரிடம் விசாரித்தபோது அதை மறுத்து வந்தனர்.
இன்று ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நிச்சயதார்த்த படங்களை வெளியிட்டு, இது அதிகாரப்பூர்வமானது என்று தெரிவித்திருக்கிறார்.
ராணா பட்டு வேட்டி சட்டையும். மிஹீகா பட்டு சேலையும் உடுத்தியிருந்தனர்.