தமிழகத்திற்கு ரூ.2224 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு..

Tamilnadu gets tax share Rs.2000 cr. from centre.

by எஸ். எம். கணபதி, May 21, 2020, 20:56 PM IST

மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து ரூ.1928 கோடியும், உள்ளாட்சி மானியமாக ரூ.295 கோடியுமாக மொத்தம் ரூ.2223.81 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும். 2020-21-ம் ஆண்டில் மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் ரூ.7.84 லட்சம் கோடியாக இருக்கும் என்றும், இதில் நிதிக் கமிஷனின் பரிந்துரைப்படி 41 சதவீத நிதிப் பகிர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வின் மே மாத தவணையாக 46,038 கோடியே 70 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், உத்தரப்பிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ.8,255.19 கோடி நிதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா ரூ.1,892.64 கோடியையும், கர்நாடகா ரூ.1,678.57 கோடியையும், கேரளா ரூ.894.53 கோடியும், தெலங்கானா ரூ.982 கோடியும் பெற்றுள்ளன.
தமிழகத்துக்கு வரிபகிர்வுப் பங்காக ரூ.1,928.56 கோடி நிதி மட்டுமே கிடைத்துள்ளது. இதற்கிடையே, உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில், தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக ரூ.295 கோடி வளர்ச்சி மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்திற்கு ரூ.2224 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை