மோகன்லால் நடிக்கும் த்ரிஷ்யம் 2

by Chandru, May 22, 2020, 09:50 AM IST

மலையாள நடிகர் மோகன்லால் தமிழில் சிறைச்சாலை, அரண், ஜில்லா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் நடித்த த்ரிஷ்யம் படம் தான் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் பெயரில் உருவானது. தமிழ், மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இருமொழிகளிலும் இப்படத்தை இயக்கினார்.


இதற்கிடையில் ராம் என்ற படத்தில் மோகன்லால் நடிக்க ஒப்புக் கொண்டார். இப்படத்தையும் ஜீத்துவே இயக்குகிறார். வெளி நாடுகளில் படப்பிடிப்பு நடக்க விருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு படப்பிடிப்பை முடக்கியது. இந்நிலையில் த்ரிஷ்யம்2 ம் பாகத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார் மோகன்லால். இது பற்றி குறும் தகவல் வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். ஜீத்துவே இப்படத்தையும் இயக்குகிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை