விக்ரம் படம் 90 நாள் படப்பிடிப்பு முடிந்தது.. கோப்ரா பற்றி புதிய அப்டேட்..

by Chandru, May 22, 2020, 12:51 PM IST

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்தில் விக்ரம் 8 கெட்டப்பில் நடிக்கும் விவரம் அதற்கான தோற்றம் பற்றிய ஸ்டில்கள் கடந்த 2 மாதத்துக்கு முன் வெளியானது. இதனையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. தற்போது படத்தைப் பற்றி புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.இதுவரை கோப்ரா படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கள் நடந்துள்ளது. இன்னும் 25 சதவீத படப்பிடிப்பு பாக்கி உள்ளது என்று படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதே போல் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் இதுவரை 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க வேண்டி உள்ளது.


More Cinema News