குட்டி ஸ்டோரி பாடலை பாடும் வெளிநாட்டு பெண்.. வைரலாகும் வீடியோ ..

Foreigner Sings Kutty Story From Master

by Chandru, May 22, 2020, 15:06 PM IST

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் .லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .ராக்ஸ்டார் அனிரூத் இசையில் இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது . குறிப்பாகத் தளபதி விஜய் பாடிய "குட்டி ஸ்டோரி" பட்டி தொட்டி வரை வரவேற்பைப் பெற்றது .
தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் இந்த பாடல் இருந்தது .குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் டிக் டாக்கில் (பெயர் - EUGENIA ) வெளிநாட்டுப் பெண் ஒருவர் குட்டிஸ்டோரி பாடலை பாடி பதிவிட்டுள்ளார் .இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

You'r reading குட்டி ஸ்டோரி பாடலை பாடும் வெளிநாட்டு பெண்.. வைரலாகும் வீடியோ .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை