நடிகர் பிரித்விராஜ் தனது கனவு படமான ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்புக்காக 2 மாதத்துக்கு முன்பாக 58 பேர் கொண்ட குழுவினருடன் ஜோர்டான் நாட்டு பாலைவன பகுதிக்கு சென்றார். அந்த நேரம் பார்த்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் படப்பிடிப்பு நடத்த முடிய வில்லை, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் யாரும் ஊருக்கு திரும்ப முடியவில்லை. இரண்டு மாதத்துக்கும் மேலாக அவர்கள் அங்கு சிக்கி தவித்து வந்தனர்.
இதற்கிடையில் பிரித்விராஜ் மனைவியும், மகளும் சோகத்தில் ஆழ்ந்தனர். பிரித் விராஜை திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் திட்டம் அமல் படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் பிரதிவிராஜ் மற்றும் படக்குழுவினர் அழைத்து வரப்பட்டனர். பிரித்விராஜ் மற்றும் குழுவினர் இன்று மாலை விமானத்தில் கொச்சின் வந்து சேர்ந்தனர். பிரித்விராஜ் திரும்பியதையடுத்து அவரது மனைவி, குழந்தை மகிழ்ச்சி அடைந்தனர்.
நாடு திரும்பிய படக்குழுவினரை தனிமையில் இருக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். நடிகர் பிரித்விராஜ் தமிழில் மொழி, சத்தம் போடாதே உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.