ஜி.விபிரகாஷுடன் நடிக்கும் கவுதம் மேனன்..

இசையாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் ஒன்று இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.


இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி பிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மாவுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திர சேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம்பால் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

ஒரு மாணவனுக்குக் கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதையாக உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதிக் கட்ட படப்பிடிப்புக்குப் படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds