கொரோனா வைரஸ் தொற்று பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்தே மக்களும், தொழில் மற்றும் சினிமா துறையினரும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.50 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடத்த முடியாமல் முடங்கி உள்ளனர். இந்நிலையில் பணிகளைத் தொடங்க அரசிடம் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கி உள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை கொரோனா பாதிக்கும் என்பதால் அவர்களுக்கு பதிலாக இளவயதினர் மட்டும் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்னும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்காத நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஷுட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தொற்று எளிதாகப் பரவும் என்பதால் அவர்களைப் பணியில் அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்களைப் பணியில் அமர்த்த முடியும் .ஆனால் படத்தின் ஹீரோவுக்கள் சிலருக்கே 60வயது கடந்திருப்பதால் அவர்கள் இல்லாமல் எப்படிப் படப்பிடிப்பு நடத்துவது என்று தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கொரோனா தடை காலம் முடிந்த பிறகு அந்த நடிகர்கள் பங்கேற்கலாம் என்றால் லாக் டவுன் எப்போது முடியும் என்று தெரியாத நிலை உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றவர்கள் 60வயதைக் கடந்து விட்டனர். என். டி.
பாலகிருஷ்ணா போன்ற நடிகர்கள் 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்றார். அவர்கள் எல்லோரும் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நடிகர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுமா அல்லது கொரோனா கட்டுப்பாடு காரணம் காட்டி அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை தொடங்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று திரையுலகில் சிலர் முணுமுணுக்கின்றனர்.